×

பாரா குண்டு எறிதலில் தங்கம்

 

கண்ணிவெடியில் காலை இழந்த சோமன் ராணா அமர்க்களம் கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் ஆண்கள் F57 பாரா ஷாட்புட் பைனலில் நேற்று களமிறங்கிய இந்திய வீரர் சோமன் ராணா 13.40 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த ராணுவ வீரரான இவர் காஷ்மீரில் பணியாற்றியபோது கண்ணிவெடியில் சிக்கி காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றுடன் நிறைவு

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் இன்று நிறைவடைகிறது. நிறைவு விழா இந்திய நேரப்படி இரவு 1.30க்கு தொடங்கும். அடுத்த தொடர் இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நிறைவு விழாவில் இந்திய பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் குழுவினர் இசை மழை பொழிய உள்ளனர்.

Tags : Soman Rana ,F57 Para Shot Put ,Glasgow Commonwealth Games ,Bihar… ,
× RELATED காமன்வெல்த் விளையாட்டு:...