ஆகஸ்ட் 4,5 தேதிகளில் இல்லம் சென்று உணவு பொருட்கள் விநியோகம்

நாகப்பட்டினம், ஆக. 1: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இல்லம் சென்று பொது விநியோக திட்ட பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கு வரும் 4 மற்றும் 5ம்தேதிகளில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இல்லம் சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதத்திற்கு பொருட்கள் வரும் 4 மற்றும் 5 ம் தேதிகளில், 65 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைத்தாரர்கள் மேற்கண்ட நாள்களில் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயன் அடையலாம் என தெரிவித்துள்ளார்.

 

Related Stories: