கீழ்வேளூர், ஆக. 1: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கோகூர் மேட்டு தெருவை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அவரது வீட்டு அருகே இருந்த குட்டையில் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது. மாடு சேற்றில் சிக்கிக் கொண்டதால் கரைக்கு வர முடியாமல், குட்டையிலே நீண்ட நேரம் தவித்துள்ளது.
இது குறித்து அப்பகுதியினர் கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடன் கீழ்வேளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜராஜசோழன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குட்டையில் சேற்றில் சிக்கிக்கொண்ட பசுமாட்டை கயிறுகள் கொண்டு கட்டி இழுத்து மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
