ஆண்டிபட்டி, ஆக.1: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் உட்பகுதியில், சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் நடைபெறும் நீர் திருட்டை தடுக்கும் விதமாக 3வய்து நாளாக நேற்றும், அதிகாரிகள் பைப்புகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் உட்பகுதியில், அனுமதியின்றி சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மூலம் நீர் திருடப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டவிரோதமாக நீர் எடுப்பதை உடனடியாகத் தடுக்கும் வகையில், ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வ்களை அப்புறப்படுத்தி பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
