திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

 

திருச்சி, ஜூலை 31: திருச்சியில் போதை மாத்திரை விற்றதாக 2 பேரை கைது செய்த போலீசார் 215 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பகுதியில் உள்ள பள்ளி அருகே போதை மாத்திரைகள் விற்பதாக பாலக்கரை போலீசாருக்கு கடந்த 29ம் தேதி தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது, அங்கு போதை மாத்திரை விற்ற பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த அல்லா பிச்சை(41) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 207 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைப்போல், திருச்சி தில்லை நகர் ரெட்டைவாய்க்கால் பகுதியில் போதை மாத்திரை விற்ற சோனி(31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 8 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: