ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.77.92 லட்சம்

 

திருச்சி, ஜூலை 30: திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நேற்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. இந்த கணக்கெடுப்பில், ரொக்கமாக ரூ.77,92,825 மற்றும் 70.100 கிராம் தங்கம், 625 கிராம் வெள்ளி, 177 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் காணிக்கையாக கிடைத்தன. கோயில் இணை ஆணையர் சிவராம் குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியில், வங்கி ஊழியர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கலந்து கொண்டு உண்டியல்களில் இருந்த காணிக்கைகளை முறையாக எண்ணி கணக்கிட்டனர்.

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த உண்டியல் திறப்பு நிகழ்வில், பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் கருடாழ்வார் சன்னதி அருகே உள்ள மண்டபத்தில் கணக்கிடப்படும். பின்னர் கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Related Stories: