கரூர் பெரியாண்டாங்கோயில் தடுப்பணை மதகுகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்

 

கரூர், ஜூலை 30: கரூர் பெரியாண்டாங்கோயில் தடுப்பணையில் தண்ணீர் இல்லை ஆனாலும், மதகுகளுக்கு வர்ணம் பூசப்பட்டது. கரூர் மாவட்டம் பெரியாண்டாங்கோயில் பகுதியின் வழியாக அமராவதி ஆறு பயணிக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக சிறிதளவு தண்ணீர் தேக்கி வைக்கும் அளவுக்கு சிறிய அளவிலான தடுப்பணை கட்டப்பட்டது. அமராவதி ஆற்றில் தண்ணீர் வரும் போதெல்லாம் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, பின்னர் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் இந்த மாதத்தில் அமராவதி ஆற்றில் ஒரளவு தண்ணீர் வரும் ஆனால், இதுநாள் வரை தண்ணீர் வரத்து இல்லாமல் தடுப்பணை வளாகம் வறண்ட நிலையில் உள்ளது. அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின் காரணமாக அணையில் பெரியளவு தண்ணீர் இல்லை. இந்நிலையில், கரூர் பெரியாண்டாங்கோயில் தடுப்பணை வளாகத்திற்கு செல்லும் மதகுகளை சுற்றிலும் வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. எனவே, இனிமேலாவது தடுப்பணை வளாகத்தில் தண்ணீர் வருமோ? என்று விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

Related Stories: