விருதுநகரில் அரசு அலுவலகத்திற்குள் புகுந்த மரநாய் மீட்பு

விருதுநகர்: விருதுநகர் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பணிமனை அருகே டான்பெட் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக முதல் மாடியில் இந்து சமய அறநிலையத்துறையின் தணிக்கை ஆவணங்கள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. டான்பெட் பின்புறம் உள்ள ஓடை வழியாக நேற்று மாலை உணவு தேடி சுற்றித்திரிந்த மரநாய் ஒன்று, இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் புகுந்து அறையில் மாட்டிக் கொண்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள், விருதுநகர் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், விரைந்து வந்த உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் முத்து பாண்டியன் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள், அரசு அலுவலகத்தில் இருந்த மரநாயை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மரநாயை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Related Stories: