×

நைட்டி அணிந்து வரும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது: செல்போனில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் வீடியோவும் இருந்ததால் ஷாக்

காரைக்குடி: காரைக்குடி அருகே பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரில், 19 வயது பெண் தனது தாயாருடன் கடையில் பொருட்கள் வாங்க நின்றுள்ளார். அப்போது அருகே நின்ற நபர் தன்னை வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பள்ளத்தூர் போலீஸ் ஸ்டேசனில் அவர் புகார் அளித்தார்.

அதன் பேரில் அந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் கானாடுகாத்தான் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45) என தெரியவந்தது. விசாரணையில் செந்தில்குமார் 2 செல்போன்களை வைத்துக் கொண்டு பள்ளத்தூர், கானாடுகாத்தான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட் மற்றும் மாணவிகள் அதிகம் நிற்கும் இடங்களில் கல்லூரி மாணவிகள் மற்றும் நைட்டி அணிந்து வரும் பெண்களை ஆபாசமான கோணங்களில் வீடியோ எடுத்து ரசித்து வந்துள்ளார்.

புகார் அளித்த 19 வயது பெண் தன்னை வீடியோ எடுப்பது குறித்து கேட்டபோது, அவரை ஆபாசமாக பேசிய செந்தில்குமார், அவரது வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும், போலீசில் சொன்னால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

செந்தில்குமாரின் செல்போனில் இதுபோல் 100க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோ பதிவுகள் இருந்துள்ளன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளத்தூர் போலீசார் செந்தில்குமாரை நேற்று கைது செய்தனர். இதுபோன்ற வீடியோக்களை பெண்களிடம் காண்பித்து மிரட்டி பணம் பறிப்பு, பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வந்துள்ளாரா என்றும் விசாரித்து வருகின்றனர்.

Tags : Karaikudi ,Sivaganga district ,
× RELATED திருப்பதியில் பயங்கரம் நகைக்காக...