×

காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து

புவனகிரி: சிதம்பரம் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன்(28), எலக்ட்ரீசியன். இவர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை வீசி உள்ளார். தொடர்ந்து பள்ளி செல்லும்போதெல்லாம் மாணவியை பின்தொடர்ந்து சென்று காதலிக்கும்படி வற்புறுத்தினார்.

ஆனால் அந்த மாணவி, படிப்பு தான் முக்கியம். எனக்கு காதலில் ஈடுபாடு இல்லை என கூறி மறுத்துள்ளார். எனினும் மாணவியை அவர் பின்தொடர்ந்துள்ளார். இவ்விவகாரம் 2 ஆண்டுகளாக நீடித்து உள்ளது. என்னை காதலிக்கவில்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியும் உள்ளார். இந்நிலையில் நேற்று மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஐயப்பன், அங்கு சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார்.

இதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த ஐயப்பன் சிறிய கத்தியால் மாணவியின் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் குத்திவிட்டு தப்பினார். மாணவியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்படி சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து மாணவியை கத்தியால் குத்திய எலக்ட்ரீசியனை தேடி வருகின்றனர்.

Tags : Bhubanagiri ,Chidambaram ,Cuddalore District ,C. Ayyappan ,Mudlur ,
× RELATED திருவாரூரில் சட்ட விரோதமாக மணல் கடத்தல்: 5 பேர் கைது