×

ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரியில் பணம் கேட்டு சூறையாடிய தவெக நிர்வாகி

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய தவெக செயலாளர் பாலமுருகன் உள்பட இருவர் நேற்று அந்த கல்குவாரிக்கு சென்று பணம் கேட்டுள்ளனர்.‌ அங்குள்ள பணியாளர்கள் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் கல்குவாரி மேலாளர் உள்ளிட்டவர்களை மிரட்டியுள்ளனர்.

மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர், டிவி, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.  இதுகுறித்து கல்குவாரி மேலாளர் பூலையா, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தவெக ஒன்றிய செயலாளர் பாலமுருகன் (33), அவரது சகோதரர் முண்டன் என்ற முண்டசாமி (36) ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thaveka ,Srivaikundam ,Padmanabhamangalam ,Thoothukudi district ,Srivaikundam West Union ,Balamurugan ,
× RELATED 10 இடங்களில் நேற்று வெயில் சதம்...