×

தர்மேந்திர பிரதான் ராஜினாமா பாஜ பின்னடைவின் துவக்கம்: மார்க்சிஸ்ட் அறிக்கை

சென்னை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் மாணவர், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். நாடு முழுவதும் போராடிய மாணவர்கள் மீது கடும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பெல்லட் குண்டுகள் கூட அவர்கள் மீது பிரயோகப்படுத்தப்பட்டன. தேசவிரோத குற்றச்சாட்டுக்கள் எல்லாம் முன் வைக்கப்பட்டன.

இவ்வளவையும் மீறிப் பாலினம், மதம், சாதி பேதங்களைக் கடந்து மாணவர்கள், இளைஞர்கள் களத்தில் காட்டியுள்ள உறுதியே ஆட்சியாளர்களை அசையவைத்து அமைச்சரை பதவி விலக வைத்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்பது நிர்வாக ரீதியான தோல்வி மட்டுமல்ல. அது கல்வி வணிக மயமாவதன் வெளிப்பாடு.

நீட் போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி என்பது பெருந்தொழிலாக மாறியதும், அதன் உப விளைவாக கேள்வித் தாள் கசிவு போன்றவை நிகழ்ந்தன என்பதே பிரச்சினையின் ஆணி வேர். எனவே, நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் களத்தில் ஆதரவாக நின்றிருக்கின்றன. தர்மேந்திர பிரதான் ராஜினாமா, பாஜ பின்னடைவின் துவக்கம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Dharmendra Pradhan ,BJP ,Chennai ,P. Shanmugam ,Union Education Minister ,
× RELATED டன்னுக்கு ரூ.4,500 வழங்க வலியுறுத்தி...