×

நகராட்சி பணியாளர் நியமன ஊழல் திரிணாமுல் எம்எல்ஏ மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நகராட்சி பணியாளர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பான பண மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக திரிணாமுல் எம்எல்ஏ மனைவியிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது. மேற்கு வங்க மாநிலம்,டிட்டாகார் நகராட்சியில் நடந்த 125 பணியாளர்கள் நியமனத்தில் மிக பெரிய ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக நடந்த விசாரணையின் போது கமர்ஹாட்டி எம்எல்ஏ மதன் மித்ராவுக்கு ஊழலில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து மதன் மித்ராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகளையும் அதிகாரிகள் நடத்தினர். இந்த நிலையில், இதில் நடந்த பண மோசடி தொடர்பாக மதன் மித்ராவின் மனைவி அர்ச்சனாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே, மதன் மித்ராவின் இரு மகன்களான சுவரூப், சுபாரூப் ஆகியோரிடம் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமலாக்க அதிகாரி கூறுகையில், விசாரணையின் போது ஏற்கனவே சேகரிக்கப்பட்ட ஆவண ஆதாரங்களை உறுதிப்படுத்துவதே இந்த விசாரணையின் நோக்கம். யாருடைய பங்கு அல்லது நிதிப் பரிவர்த்தனைகள் சரிபார்க்கப்பட வேண்டுமோ, அந்த நபர்கள் அனைவருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Tags : Enforcement Directorate ,Trinamool ,MLA ,Kolkata ,Trinamool MLA ,West Bengal ,Titagarh ,
× RELATED டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது...