துபாய்: ஈரான் மீது 12வது இரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதது. ஈரான் மீது 12வது நாள் இரவாக அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்கு ஈரானில் உள்ள அஹ்வாஸ், ராம்ஷிர் மற்றும் ஆண்டிமெஷ்க் நகரங்களுக்கு அருகே அமெரிக்க ஏவுகணைகள் தாக்கியதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் எல்லையில் உள்ள ஷலம்கே நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ஈரானின் அத்துமீறிய ஆக்கிரமிப்பை தொடர்ந்து டிரோன்களில் தாக்குதல்களை வான்பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொண்டு வருவதாக குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது.
* 2 கப்பல்கள் மீது தாக்குதல்
காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடல் மற்றும் பாப்-எல்-மந்தீப் ஜலசந்தி வழியாக செல்லும் சர்வதேச வர்த்தக கப்பல்கள் மீது ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று பாப் எல் மந்தேப் நீரிணை வழியாக செல்லும் சவுதி தொடர்புடைய 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது.
