தூத்துக்குடியில் போலீசார் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்ததை கண்டித்து பெற்றோர்கள், உறவினர்கள் சாலை மறியல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீசார் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்ததை கண்டித்து பெற்றோர்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் (29) என்ற இளைஞரை கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றதாக போலீசார் கைது செய்தனர். கடந்த 18ம் தேதி அருணாச்சலம் என்பவரை கைது செய்த போலீசார் அவரை தாக்கியதாகவும் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அருணாச்சலம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து போலீசார் தாக்கியதில் அருணாச்சலம் இறந்ததா அவரது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அருணாச்சலத்தின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குமூலம்
தூத்துக்குடி தென்பாக்கம் போலீசார் தன்னை தலையில் தாக்கியதாக அருணாச்சலம் வாக்குமூலம் அளித்த வீடியே வெளியாகியுள்ளது. இளைஞர் அருணாச்சலம் வாக்குமூலத்தின் மூலம் தூத்துக்குடி போலீசாரின் கொடூர தாக்குதல் அம்பலமாகியுள்ளது. மேலும் இளைஞரின் தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: