* ஒருநாள் போட்டிகளில் அதிக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் கண்ட ஜோடிகள் பட்டியலில் ரோகித் கோஹ்லி 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளனர். லார்ட்ஸ் போட்டியில் 2வது விக்கெட்டுக்கு 86 பந்தில் 113 ரன் எடுத்த இந்த ஜோடிக்கு இது 21வது செஞ்சுரி பார்ட்னர்ஷிப் ஆகும். இலங்கையின் தில்ஷன் சங்கக்கரா (20) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். இந்த பட்டியலில் இந்தியாவின் சச்சின் கங்குலி இணை (26) முதலிடம் வகிக்கிறது.
* துலீப் டிராபி கிரிக்கெட் தொடருக்கான மேற்கு மண்டல அணியின் கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
* இந்தியாவுக்கான அர்ஜென்டினா தூதர் மரியானோ கவுசினோ தங்கள் அணிக்கு ஆதரவாக இருந்த இந்திய ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றி தெரிவித்து எக்ஸ் வலைத்தளத்தில் தகவல் பதிந்துள்ளார்.
