சிகிச்சை பெற்ற பெண்ணை நர்ஸ் வீடியோ எடுத்ததாக தகராறு; உ.பி. மருத்துவமனையில் பயிற்சி செவிலியர்கள் மீது பயங்கர தாக்குதல்: தந்தை, மகன் உள்பட 20 பேர் மீது வழக்கு

 

ஷாஜஹான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லதா சிங் என்ற பெண் சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வௌ்ளிக்கிழமையன்று அந்த பெண்ணின் உறவினர்கள் நோயாளியுடன் இருந்தபோது பயிற்சி செவிலியர் ஒருவர் நோயாளி லதா சிங்கை செல்போனில் வீடியோ படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட பெண்ணின் உறவினர்கள் அந்த செவிலியரை தாக்கி, முடியை பிடித்து இழுத்ததுடன், அங்கிருந்த மற்றொரு செவிலியரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து வேறு சிலரை மருத்துவமனைக்கு வரவழைத்த லதா சிங்கின் உறவினர்கள், டயாலிசிஸ் பிரிவுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியதுடன், மேலும் சில செவிலியர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில், லதா சிங்கின் தந்தை மற்றும் அடையாளம் தெரியாத 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: