×

ஜனநாயகன் படம் பார்க்க லீவு போட்ட அமைச்சர்

கோவை: கோவையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி அளித்தார். அப்போது, நிருபர்கள் வருகிற 23ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீசாக உள்ளது. ஏதேனும் கொண்டாட்ட ஏற்பாடுகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், ஜனநாயகன் படம் ரிலீசாகும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

படம் வெளியாகும் 3 மணி நேரம் மட்டும் பழைய ரசிகராக செயல்பட முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவர் அதனை ஒத்துக்கொள்ளவில்லை. இனி வாழ்க்கையில் எப்ப முதல் நாள், முதல் காட்சி என்பது தெரியவில்லை. கோவையில் வழக்கமாக பார்க்கும் தியேட்டரில் ஜனநாயகன் பார்க்க லீவு போட்டு விட்டு வந்துட்டேன் என்றார்.

Tags : Coimbatore ,Minister ,Vignesh ,
× RELATED ஆவின் நெய் விலை உயர்வு வாபஸ்