தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் 7.5 கோடி மாணவர்கள் பாதிப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 

 

டேராடூன்: நீட் தேர்வுத்தாள் கசிவு, பிளஸ் 2 விடைத்தாள் பிரச்னை தொடர்பாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரில் நடந்த மாணவர் பேரணியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசினார். அவர் கூறியதாவது: பணமும் செல்வாக்கும் கொண்ட 1 சதவீத மாணவர்கள் தேர்வுத்தாள் கசிவு ஏற்படுகிறது. இதனால் 99 சதவீத நேர்மையான நடுத்தர வர்க்க மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உணவகங்களில் உணவுக்கான ‘மெனு கார்டுகள்’ இருப்பதைப் போலவே, பல்வேறு தேர்வுத்தாள்களுக்கும் ‘மெனு கார்டுகள்’ இருக்கும் அளவுக்குத் தேர்வுத்தாள் கசிவு பரவலாகிவிட்டது.

உங்களிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தால், மெனு கார்டிலிருந்து உங்களுக்குத் தேவையான தேர்வுத்தாளைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில், மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை ஒட்டுமொத்த கல்வி அமைப்பும் ஈடுபட்டுள்ளது. இதுவரை 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Related Stories: