×

கோட்டூர்புரத்தில் மதுபானம் வாங்க சென்ற போது தெரு நாய் கடித்து கூலித்தொழிலாளி பலி

சென்னை: கோட்டூர்புரத்தில் மதுபானம் வாங்க சென்ற போது, தெரு நாய் கடித்து கூலித் தொழிலாளி ஒருவர் முதல் உதவி சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார். சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்தவர் முருகன்(45). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். போதைக்கு அடிமையாகி தினமும் மது அருந்து வது வழக்கம். அதன்படி கடந்த 45 நாட்களுக்கு முன்பு கோட்டூர்புரம் சூர்யா நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்ற போது, தெரு நாய் ஒன்று முருகனை இடது காலில் கடித்து காயம் ஏற்படுத்தியது.

அதை பெரிதுப்படுத்தாமல் முருகன் மதுவாங்கி வந்து குடித்துள்ளார். இதற்கிடையே தெரு நாய் கடித்த இடத்தில் காயம் பெரிதாக இருந்துள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அறிவுறுத்தியதின் படி, நேற்று முருகன் சைதாப்பேடடை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இதற்கிடையே இன்று அதிகாலை முருகனுக்கு திடீரென வலிப்பு மயக்கம் ஏற்பட்டது.

உடனே அவரது உறவினர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் இதுகுறித்து உறவினர்கள் அளித்த தகவலின் படி கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Koturpur Chennai ,Koturpur ,Murugan ,Chitra Nagar, Chennai, Koturpuram ,
× RELATED தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தமிழக...