×

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!! மீண்டும் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை…

டெல்லி: வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரைக்கு அருகில், வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதி செய்துள்ளது. தற்போது உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் கங்கை சமவெளிப் பகுதிகளை நோக்கி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மிகக் கனமழை பெய்ய கூடும் என்றும், மேற்கண்ட பகுதியில் இருக்கும் மீனவர்கள் ஜூலை 18 வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வந்த தென்மேற்கு பருவமழை, சமீப நாட்களாக சற்று தளர்வடைந்து பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வந்தது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி , பருவமழையை மீண்டும் தீவிரப்படுத்தவும், மழைப் பொழிவை அதிகரிக்கவும் மிக முக்கியக் காரணமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். மேலும் தற்போது புதிதாக உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மத்திய மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் கோடைக்கால (காரிஃப்) பயிர் சாகுபடிக்கு மிகவும் சாதகமான மழைபொழிவை தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Bengal Sea ,Delhi ,North Odisha ,Bank Sea ,West Bengal ,Indian Meteorological Centre ,IMD ,
× RELATED திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு...