டெல்லி: அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீதான 500% வரியை 100% ஆக அமெரிக்கா குறைத்தது. ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்கா நாடாளுமன்றம் திருத்தம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது. திருத்தப்பட்ட மசோதா, ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகளின் பொருட்கள் மீதான வரியை குறைத்து, ரஷ்யாவிடம் பெருமளவு கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் நிறுவனத்துக்கு மட்டுமே 100% வரிவிதிக்க புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
