டெல்லி: ஒடிஷா – மேற்கு வங்கம் இடையே வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதிய காற்றழுத்தம் காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பு எனவும் 2 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
