மதுரை: நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் காசிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட் கிளை. நாகர்கோவில் காசி 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இளம்பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை அறிவுரை வழங்கியுள்ளது.
