தூத்துக்குடி: சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி (79)உடல்நலக் குறைவால் காலமானார் . அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பூமணியில் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பூமணி உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்த நிலையில், காவல்துறை அணிவகுப்புடன் 30 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புகழ்பெற்ற எழுத்தாளர் பூமணி, உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். பூமணியின் உடல் இன்று நண்பகல் 12 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், சொந்த ஊரான இளையரசனேந்தல் அருகே உள்ள ஆண்டிபட்டி கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது தோட்டத்தில் பிற்பகல் 2 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடந்து, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
