சென்னை: பழனி கோயில் நில மோசடியில் முறைகேடாக பத்திரப்பதிவு நடந்தது உறுதியானது. ரூ.100 கோடி கோயில் நில மோசடி தொடர்பாக உரிய விசாரணை நடந்து வருகிறது. விடுப்பில் சென்ற சார்-பதிவாளர் பத்திரப்பதிவு கூடாது என எழுதி வைத்துள்ளார். விடுப்பில் வந்த சார்-பதிவாளர் அதனை கவனிக்காமல் பத்திரப்பதிவு செய்துள்ளார். பழனி கோயில் நிலத்தை சட்டப்படி மீட்போம். பின்புலம் தெரியாமல் கோயில் நிலத்தை தவறாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்துள்ளோம்.
