×

பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணி; 2 மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், 2 மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், அடையாறு மண்டலம், தரமணி சரிவு மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வரும் 16ம்தேதி இரவு 10 மணி முதல் 17ம்தேதி இரவு 10 மணி வரை மண்டலம் -9 (தேனாம்பேட்டை) -க்குட்பட்ட வடக்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், தெற்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், ஐஸ் ஹவுஸ் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் மண்டலம் – 13 (அடையாறு) – க்குட்பட்ட பட்டினப்பாக்கம் கழிவுநீர் உந்து நிலையம், ராஜா அண்ணாமலை புரம் கழிவுநீர் உந்து நிலையம், பக்தவச்சலம் நகர் கழிவுநீர் உந்து நிலையம். அடையாறு கழிவுநீர் உந்து நிலையம் தற்காலிகமாக செயல்படாது.

எனவே, தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். அதன்படி, தேனாம்பேட்டை மண்டலம் பகுதி பொறியாளரை 8144930909 என்ற எண்ணிலும், அடையாறு மண்டலத்தில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு பகுதி பொறியாளரை 8144930913 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Chennai Water Supply Board ,Chennai ,Chennai Metro Rail… ,
× RELATED சாமானியருக்கு ஒரு சட்டம், தவெக...