×

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – 5 பேர் கைது

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழக ஊழியர் உட்பட 5 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 2 இளைஞர்களிடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அங்கு அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த சசிகுமார் உள்ளிட்டோர் ரூ.18 லட்சம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், சசிகுமார் உட்பட 5 பேரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களைக் குறிவைத்து இதுபோன்ற பல்வேறு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த மோசடியில், தனியார் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்களா அல்லது வேறு யாரேனும் இவர்களிடம் சிக்கி ஏமாந்துள்ளனரா என்ற கோணத்திலும், இந்த மோசடிப் பின்னணியில் வேறு நபர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Anna University ,Chennai ,
× RELATED அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய...