திருப்புத்தூர், ஜூலை 14: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் தலைமையில், மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (ஜூலை 16) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, திருப்புத்தூரில் உள்ள செயற்பொறியாளர் கோட்ட அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் திருப்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரியம் சம்பந்தமான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை திருப்புத்தூர் துணைமின் நிலைய செயற்பொறியாளர் நாகநர்மதா தெரிவித்துள்ளார்.
