×

தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது

 

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் 10ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6800க்கு விற்றது. தொடர்ந்து 11ம் தேதி அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,300க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6400க்கு விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.240க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,600க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், மாற்றமின்றி விற்றது. ஒரு கிராம் வெள்ளி விலை வெள்ளி ரூ.240க்கும், பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையானது.

Tags : Chennai ,
× RELATED சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 10% உயர்வு