புவனேஷ்வர்: தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்றுவருபவர் சிஏ ராமதாஸ்(33). கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அவருக்கு ஒடிசா பிரிவு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் பயிற்சி பெற்று வரும் ஐபிஎஸ் அதிகாரியான ராமதாஸிடம் இருந்து அரசுக்கு ராஜினாமா கடிதம் வந்துள்ளது.
அவர் இன்னும் களப்பணியில் ஈடுபடத் தொடங்கவில்லை. அவரது ராஜினாமாவுக்கான காரணம் தெரியவில்லை. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் 2013ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியும் புவனேஷ்வர் காவல் துணை ஆணையருமான ஜக்மோகன் மீனா(37) தனிப்பட்ட காரணங்களுக்காக தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
