×

லார்ட்ஸ் டெஸ்ட் முதல் இன்னிங்சில் 170 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து

லண்டன்: இந்திய மகளிர் அணியுடனான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து அணி 170 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. லார்ட்ஸ் மைதானத்தில் முதல் முறையாக நடக்கும் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச… இந்தியா 285 ரன் குவித்து முதல் இன்னிங்சை இழந்தது (74.5 ஓவர்). தொடக்க வீராங்கனை மந்தனா அதிகபட்சமாக 83 ரன் விளாசினார்.

ஜெமிமா 35, கேப்டன் ஹர்மான்பிரீத் 58, தீப்தி ஷர்மா 57 ரன் எடுத்தனர். இந்தியா 11 ரன்னுக்கு கடைசி 4 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பந்துவீச்சில் சோபி எக்லஸ்டோன் 3, லாரென் பைலர், இஸ்ஸி வோங், மேடி வில்லியர்ஸ் தலா 2, லாரென் பெல் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன் எடுத்திருந்தது. 2ம் நாளான நேற்று அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணி 59.1 ஓவரில் 170 ரன்னுக்கு சுருண்டது.

அமி ஜோன்ஸ் 52, கேப்டன் ஸ்கிவர் பிரன்ட் 44, மாயா பவுசியர் 23 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இந்திய பந்துவீச்சில் கிராந்தி கவுட் 17 ஓவரில் 7 மெய்டன் உள்பட 37 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சாயாலி, ஸ்நேஹ் ராணா தலா 2, தீப்தி ஷர்மா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 115 ரன் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது.

Tags : England ,Lord's Test ,London ,women's team ,Lord ,India ,
× RELATED இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!..