சென்னை: விடுதலை கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகுமுத்துக்கோன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன்.
அடிமையாய் உயிர்வாழ்வதைக் காட்டிலும் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடி மடிவதே மேல் என விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகு முத்துக்கோனின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
