மதுரை : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிகமாக மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது. அரசு பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்த மனு மீது மதுரை அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. அரசுப் பணி நியமனம் என்பது நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது எனக் கூறி நாதக, மஜக நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கு ஜூலை 21க்கு ஒத்திவைத்தது.
