சென்னை: இதயம் முரளி திரைப்படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. பராசக்தி படத்துக்காக தனக்கு வழங்க வேண்டிய ரூ.8.39 கோடி செலுத்த வேண்டும் என்று சுதா கொங்கரா தொடர்ந்த வழக்கில் சம்பள பாக்கி பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ள இயக்குநர் சுதா கொங்கராவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
