காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு குருதி சாதனையாளர் விருது

 

காஞ்சிபுரம், ஜூலை 3: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு குருதி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், தமிழ்நாடு மாநில ரத்த மாற்று வாரியம் சார்பில், உலக குருதி கொடையாளர் தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கடந்த ஓராண்டில் அவசர காலங்களில் 1,568 யூனிட் ரத்த தானம் செய்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் தாரேஸ் அகமது ஆகியோர் பங்கேற்று, மாவட்ட மருத்துவரணி செயலாளர் சர்புதீனிடம், குருதி சாதனையாளர் விருது மற்றும் சான்றிதழை வழங்கினர். நிகழ்வில் கிளை மருத்துவரணி அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Related Stories: