×

புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கான மானிய கடன் வழங்குவது தொடர்பான சிறப்பு நேர்காணல்: வருகிற 15ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கான மானிய கடன்கள் வழங்குவது தொடர்பான சிறப்பு நேர்காணல் வருகிற 15ம் தேதி நடைபெறுகிறது. சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கான மானிய கடன்கள் வழங்குவது தொடர்பான சிறப்பு நேர்காணல் வருகிற 15ம் தேதி நடைபெற உள்ளது. மண்டல இணை இயக்குநர், சென்னை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 5 மணிவரை மானியக்கடன்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு நேரடி நேர்காணல் மண்டல இணை இயக்குநர் தலைமையில் நடைபெறுகிறது.

இச்சிறப்பு நேரடி நேர்காணலில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டத்தின் (ஜிகீணிணிஷி) கீழ் (மகளிருக்கு மட்டும்) உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த நிறுவனங்களுக்கு 25 % மானியமும், கைவினை தொழில்கள் தொடங்க மற்றும் விரிவாக்கும் செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு கலைஞர் கைவினைத்திட்டத்தின் கீழ் 25% மானியமும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபார நிறுவனங்களுக்கு 25 % மானியமும்,

புதியதாக தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கு 25% மானியமும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மட்டும்) உற்பத்தி, சேவை மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு 35% மானியமும், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (றிவிணிநிறி) கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கு 15% முதல் 25% வரை மானியமும்,

பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் (றிவிதிவிணி) கீழ் உணவு பொருள் சார்ந்த உற்பத்தி நிறுனங்களுக்கு 35 % மானியமும், கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கி கடன் பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்களான ஆதார்அட்டை, பான்அட்டை, வங்கி புத்தக நகல், குடும்ப அட்டை நகல், மாற்றுசான்று, விலைப்புள்ளிபட்டியல் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றை 15ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு நேரடி நேர்காணலில் கலந்து கொள்வதற்காக எடுத்துவர வேண்டும்.

இச்சிறப்பு நேரடி நேர் காணலில் புதியதாக தொழில் தொடங்க அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற விரும்புபவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 044-22401620 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, இச்சிறப்பு முகாமில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,District Collector ,S. Malathi Helen ,
× RELATED திருமா பேசியது என்னை தூக்கி வாரி...