- கட்சி
- மேற்கு வங்கம்
- திரிணமுல்
- பாஜக
- ராஜ்ய சபா
- கொல்கத்தா
- திரிணாமூல் காங்கிரஸ்
- திருநாமூல் கட்சி
- மம்தா பானர்ஜி
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
- ரிதாப்ரதா பானர்ஜி
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தோற்று பா.ஜ வென்றதால் திரிணாமுல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி மீது அதிருப்தி கொண்ட எம்எல்ஏக்கள், எம்பிக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவராக உள்ள ரிதப்ரதா பானர்ஜி பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜியின் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாக கருதப்பட்ட சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிங் பரேக் ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில் ஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிங் பரேக் ஆகிய மூன்று பேரும் நேற்று பாஜவில் இணைந்தனர். அவர்கள் கட்சியில் இணைந்ததும் உடனே பா.ஜ சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
