×

சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் விநாயகன் மீது வழக்கு

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விநாயகன். அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவதால் இவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆலப்புழாவைச் சேர்ந்த ஒரு 14 வயது சிறுமியின் போட்டோவை நடிகர் விநாயகன் தன்னுடைய முகநூலில் வெளியிட்டார்.

இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய் ஆலப்புழா மாவட்ட சிறுவர்கள் நல ஆணையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நடிகர் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்ய மாவேலிக்கரை போலீசுக்கு குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது.மாவேலிக்கரை போலீசார் நேற்று விநாயகன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags : Vinayagan ,Thiruvananthapuram ,Alappuzha ,
× RELATED குஜராத்தில் பயிற்சியின்போது...