நீடாமங்கலம் அருகே மின்கம்பி உரசியதால் கூரைவீடு எரிந்து சாம்பல்

 

நீடாமங்கலம், ஜூலை 9: நீடாமங்கலம் அருகே பழைய நீடாமங்கலம் மேல தெருவில் கூரை வீடு எரிந்து சாம்பல் ஆனது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பழைய நீடாமங்கலம் மேலத் தெருவை சேர்ந்தவர் சசிகுமார், புனிதா தம்பதிகள். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய நீடாமங்கலம் மேல தெருவில் ஆளோ பிளாக் வைத்து மேல் பகுதியில் கீற்று போட்டு கூரை விட அமைத்துள்ளனர். இந் நிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் வீசிய காற்றால் அருகில் உள்ள மின்கம்பிகள் உரசிதால் வீடு தீ பிடித்தது. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்கு முன் தீ மல மல பரவி வீடு முழுவதும் கொழுந்து விட்டு எறிய தொடங்கியது. உடனே நீடாமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் வருவதற்குள் வீடு முழுமையாக எரிந்து சாம்பலானது. தீயணைப்புத் துறையினர் அருகில் உள்ள வீடுகள் மேலும் தீ பிடிக்காமல் இருக்க தீயை மேலும் அணைத்து கட்டுப்படுத்தினர்.

 

Related Stories: