வயநாடு சுரங்கப்பாதை பகுதியில் பயங்கர நிலச்சரிவு: 6 பேர் மீட்பு!

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு கள்ளாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கப்பாதை பணிகள் நடந்து கொண்டிருந்தபோது மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், சேற்றில் புதையுண்ட ஒரு தொழிலாளி உட்பட 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அருகில் உள்ள எஸ்டேட் பகுதியில் சிலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அங்குள்ள தற்காலிக பேருந்து நிறுத்தமும் மண்ணில் புதைந்துள்ளது. மேலும் பாலம் ஒன்று இடியும் நிலையில் உள்ளதால், ஆபத்தான பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கேரளா முதலமைச்சர் வி.டி. சதீசன் நிலச்சரிவு குறித்து அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். அமைச்சர்கள் வயநாட்டிற்கு விரைந்துள்ளனர். போலீஸ், தீயணைப்புத் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையும்விரைந்து வருகிறது.

Related Stories: