புதுடெல்லி: வாட்ஸ்அப்பில் கொண்டு வரப்பட உள்ள புதிய ‘யூசர்நேம்’ வசதி குறித்த பாதுகாப்பு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க, அதன் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு ஒன்றிய அரசு மேலும் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த புதிய வசதியால் சைபர் குற்றங்கள் அதிகரிக்கக்கூடும் என அரசு கவலை தெரிவித்துள்ளது.
