தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் கைது

புதுடெல்லி: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் மற்றும் இரண்டு தனி நபர்களை லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் ஆனந்த் சிங் சவுகான், ரூ.13.38கோடி மதிப்பிலான நிலுவை கட்டணத்தை விடுவிக்க ரூ.12லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக சிபிஐயில் புகார் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.4 லட்சத்தை வாங்கியபோது,ஆனந்த் சிங் சவுகான் மற்றும் அவருக்கு உதவிய 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

Related Stories: