- உச்ச நீதிமன்றம்
- கரூர்
- புது தில்லி
- விஜய்
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வெற்றி காமகன்
- கரூர் மாவட்டம், வேலுசாமிபுரம்
புதுடெல்லி: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யும், தற்போதைய முதல்வருமான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கின் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக விஜய் மூன்று முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் கரூர் உயிரிழப்பு தொடர்பான வழக்கை வரும் 13ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜேகே மகேஸ்வரி மற்றும் அத்துல் சந்தர் கார் ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.குறிப்பாக தமிழக வெற்றி கழகம் மற்றும் முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் நேரடியாக ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு ஆளுநரிடமும் திமுக அதிமுக ஆகிய கட்சிகள் புகார் மனுவை கொடுத்திருந்த சூழ்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
