×

பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி

பாட்னா: பீகாரில் கடந்த 2025ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ‘ஜன் சுராஜ்’ கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், பாங்கிப்பூர் தொகுதி பாஜ எம்எல்ஏ நிதின் நபின் பாஜ தலைவரானதையடுத்து, மாநிலங்களவை எம்.பியானார். அவர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதியில் வரும் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில், பாங்கிப்பூர் தொகுதியில் தான் போட்டியிடப்போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். இந்த தேர்தல், 2 மாத பாஜக அரசின் செயல்பாடுகளுக்கான ‘வாக்கெடுப்பு’ என பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

Tags : Prashant Kishore ,Bihar midterm elections ,Patna ,Jan Suraj ,Bihar ,Banghipur ,Baja ,MLA ,Nitin Nabin Baja ,
× RELATED இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் மீது...