அபிஷேக் 59, ஷ்ரேயாஸ் 68 இந்தியா 20 ஓவரில் 189/7

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்: இங்கிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில், அபிஷேக் ஷர்மா மற்றும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் விளாச, இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. ரிவர்சைடு மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சாம்சன் (1), இஷான் (0 ரன் அவுட்) ஏமாற்றமளித்த நிலையில், அபிஷேக் அதிரடியாக அரை சதம் விளாசி அசத்தினார். அபிஷேக் – ஷ்ரேயாஸ் 3வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தனர்.

அபிஷேக் 59 ரன் (24 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), திலக் 13 ரன்னில் வெளியேறினர். ஷ்ரேயஸ் 68 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாச, ஹர்ஷித் டக் அவுட்டானார். கடைசி பந்தில் அக்சர் (3) ரன் அவுட்டாக… இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. துபே 42 ரன்னுடன் (21 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் சகிப் மகமூத் 3, சாம் கரன், அடில் ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

Related Stories: