இங்கிலாந்துடன் இன்று முதல் டி.20 போட்டியில் மோதல்; ஆடும் லெவனில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா?: கேப்டன் ஸ்ரேயாஸ் பேட்டி

செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி.20போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது. இதில் முதல் டி.20 போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. அயர்லாந்துக்கு எதிரான டி.20 தொடரில் (0-2) ஒயிட்வாஷ் ஆன உலக சாம்பியன் இந்தியாமீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையி்ல் இந்ததொடரில் சாதிக்கவேண்டிய நெருக்கடியில் களம் இறங்குகிறது. பேட்டிங்கில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக 15 வயது இளம்புயல் சூர்யவன்ஷி இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அபிஷேக் சர்மா ,இஷான்கிஷன், கேப்டன் ஸ்ரேயாஸ், திலக்வர்மா, சிவம் துபே என அதிரடி பேட்டிங் வரிசை உள்ளது.பவுலிங்கில்அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா ஆகியோருடன் வருண் சக்ரவர்த்தி ஆடும்லெவனில் இடம்பெறக்கூடும் என தெரிகிறது.

மறுபுறம் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பில்சால்ட், பட்லர், பெத்தேல், சாம்கரன், வில்ஜாக் என சிறந்தபேட்டர்கள் உள்ளனர். பவுலிங்கில் லியாம் டாசன், அடில் ரஷித், லூக் வுட், சாகிப் மஹ்மூத் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அளிப்பர். இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் , ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.இந்த போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்குமா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதிலில்,என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து இப்போது பேசவும் முடியாது. எனது கைகளும் கட்டப்பட்டுள்ளன, எந்த லெவனில் விளையாடப் போகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்து, எதிரணியினருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த முடியாது. ஆனால், அவர் நிச்சயமாக ஒரு அற்புதமான திறமைசாலி, அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் சிறப்பாக செயல்படுவார், என்றார். உலகக் கோப்பையை வென்றவர்களுக்கு டி20 போட்டிகளில் எவ்வாறு விளையாட வேண்டும் என்ற அனுபவம் உள்ளது, மேலும் அவர்கள் இந்த ஃபார்மட்டின் முக்கிய தூண்களாக இருந்துள்ளனர். எனவே அவர்களுக்கு ஆதரவாக நிற்பது மிகவும் முக்கியம்,” என்றார்.

Related Stories: