லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக ஆய்வாளர் ராஜலட்சுமி மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்ததற்காக லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்விடம் அரசு தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
