சென்னை: தியாகராய நகரில் இயங்கிவரும் பிரபல தனியார் உணவகத்தில் பணம் கையாடல் செய்த 3 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் ரூ.75,000-ஐ கையாடல் செய்ததாக, கேசியர்களான மணிகண்டன் (26), ராகுல் டிராவிட் (23), சுரேஷ் (24) ஆகியோர் வாக்குமூலம் அளித்ததை அடுத்து போலீசார் 3 பணியாளர்களை கைது செய்தனர்.
