×

அரசு ஊழியர்கள் மீது மொட்டைக் கடிதம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவு

 

மதுரை: திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன் மீதான மொட்டைக் கடிதம் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை உத்தரவை ரத்து செய்ய கோரியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘‘அரசாணை 173ன் படி மொட்டைக் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றாலும், அது லஞ்ச ஒழிப்புத்துறையை கட்டுப்படுத்தாது. அரசு ஊழியர் ஊழல், முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவது லஞ்ச ஒழிப்புத்துறையின் முக்கியப் பொறுப்பு. ஆதாரங்கள் இருந்தால் விசாரிப்பதில் தவறு இல்லை’ என்று கூறி தள்ளுபடி செய்தார்.

Tags : Anti-Corruption Department ,Madurai ,Dindigul District ,Labour Welfare ,Joint Commissioner ,Subramanian ,Court ,
× RELATED தேர்தலில் மக்கள் மிகப்பெரிய ஊழல்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை